Wednesday, March 2, 2011

யாருக்கு ஓட்டு போடலாம்!!!


அதிரை நிருபர் வலைப்பூவில் நடந்த ஒரு விவாதத்தில் என்னிடம் சகோதரர் அபு இபுராஹிம் கேட்ட கேள்வியை போன்று பல நண்பர்கள் என்னிடம் கேட்டனர் அந்த கேள்வி "யாருக்கு ஓட்டு போடலாம் " இந்த கேள்விக்கு பதிலாக ஒரு பதிவையே போட்டு விடலாம் என்று எண்ணியவனாக 

யாருக்கு ஓட்டு போடலாம் காலச் சூழ்நிலைக்கு தகுந்த கேள்வி, இந்த கேள்வியை ஒரு சாதாரண கேள்வியாக என்னால் எடுத்து கொள்ள முடியவில்லை ஏனெனில் ஏற குறைய அரை நூறு   ஆண்டுகளாக நம்மவர்களின் பலர் கேட்கும் கேள்வி ,, வெறும் ஓட்டு வங்கியாக இறுக்கும் நம் சமுதாயம்   , பல குழப்பங்களையும்  அல்லது குழப்பவதிகளையும் வைத்துகொண்டு விழிபிதுங்கி இறுக்கும் நம் சமுதாயம் அரசியல் விழிப்புணர்வு பெற்று நம்மவர்களை நம்மவர்கள் அல்லது நமக்காக உள்ளவர்கள் ஆட்சி அதிகாரத்தை பெற்றிட   வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் எனக்கு தெரிந்த சில அரசியல் உத்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் 


"யாருக்கு ஓட்டு போடலாம் "
*** முதல் பரிந்துரை 
முஸ்லிம் கட்சிகளால் சொந்த சின்னத்தில்  நிறுத்தப்படும் முஸ்லிம் வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும், இதன் முலம் நமது தொகுதி மட்டும் இன்றி நம் சமுதாயத்துக்கே மிக பெரிய நன்மை கிடைக்கும்


***இரண்டாம் பரிந்துரை 
முதல் பரிந்துரைப்படி வேட்பாளர்கள் நிறுத்தப்படவில்லை என்றால் மற்ற கட்சியின் சார்பாக நிறுத்தப்படும் முஸ்லிம் வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் 


*** முன்றாம் பரிந்துரை 
மிகவும் குழப்பமான சூழ்நிலை அதாவது எந்த ஒரு முஸ்லிம் வேட்பாளர் நிருத்தபடாத சூழ்நிலையில் , நமது கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சிக்கு அதரவு கொடுக்கலாம், எவனுமே சரி இல்லை கேட்டு கேட்டு பார்த்தாச்சு ஒண்ணுமே செய்யல அவன் சாதிக்கும் , அவன் சமுதாயத்துக்கும் செய்யுறன் நம்மக்கு ஹல்வா கொடுக்குறான் இப்போ என்ன செய்யுறது ???... இப்போதான் நம்ம பார்முலாவை  பயன்படுத்தவேண்டும் அதாவது நம்மவர்களை நம்மவர்கள் அல்லது நமக்காக உள்ளவர்கள்  அதிகாரத்தை பெற   வேண்டும், கேட்காதவனிடம் கோரிக்கையை வைத்து என்ன பயன், அவனை அகற்றிவிட்டு கேட்பவர்கள் இடத்தில நம்மவர்களை அமர்த்த வேண்டும், இது சாத்தியமாகும? நிச்சயம் சாத்தியமாகும்  
 ஒரு கட்சியின் செயலாளர் பதவி என்பது மிகவும் முக்கியம் இவர் என்ன என்ன சொல்லுகிறாரோ அதைத்தான் அந்த தொகுதியின் எம் எல் கேட்பார் அவர் முலம்தான் எந்த கோரிக்கையும் ஏற்பார் அல்லது எந்த ஒரு கோரிக்கையையும் நிறைவேற்றுவார் , என்னெனில் இந்த செயலாளர் முலம்தான் கட்சியில் செல்வாக்கையும் , மக்களிடம் செல்வாக்கையும் பெற முடியும், உதாரணமாக அதிரை திமுகவை பொறுத்தவரை அக்கட்சியின் செயலாளர் ஒரு காவி சிந்தனை உடையவர்  இவரை வைத்து கொண்டு எந்த ஒரு  கோரிக்கையும் நம்மால் அக்கட்சிக்கு வைக்க முடியாது அல்லது எந்த ஒரு பயனையும் நம்மால் பெற முடியாது (ஏறக்குறைய எல்லா கட்சியுளும் இதே நிலைமைதான் ) இங்குதான் நாம் சிந்திக்கவேண்டும் வெறும் பத்து சதவிதம் ஓட்டு வங்கியை வைத்துள்ள இவர் எப்படி நமது ஊரின் செய்யலளராக வரமுடிந்தது தொண்ணுறு சதவிதம் ஒட்டு வங்கி உள்ள அக்கட்சியை சார்ந்த  ஒரு முஸ்லிம் செய்யலளராக வர முடியவில்லை, காரணம் இச்செயளலர்களை தேர்ந்து எடுக்க கூடிய ஒன்றிய உறுபினர்களில் முஸ்லிம்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு இதன் விளைவாக காவி சிந்தனை உடையவர்கள் திராவிட கட்சியில் செயலாளர்களாக வரமுடிகிறது, இதை தடுக்க இஸ்லாமியர்களின் உறுபினர்களை அக்கட்சியை சார்ந்த இஸ்லாமியர்கள் அதிகபடுத்தி கட்சியின் பதவிகளை பெற வேண்டும், அதன் முலம் அரசியல் தலைவர்களை உருவாக்கி முஸ்லிம்  வேட்பாளர்களை  நிறுத்த கட்சியை நிர்பந்தம் செய்யலாம், இது எல்லாம் நமக்கு சரிவராது என்று ஒதுங்கி நின்றால் நம்மை சுற்றி காவி தலைவர்கள் உருவாகுவதை நம்மால் தடுக்க முடியாது 
எந்த ஒரு கட்சியை சார்ந்தவராக நீங்கள் இருந்தாலும் சரி அக்கட்சிக்கு ஓட்டு போடுவதை மட்டும் கடமையாக வைத்து கொள்ளாதிர்கள், அக்கட்சியில் உறுபினர்களாக , ஒன்றிய உறுபினர்களாக , செயலாளர்களாக , தலைவர்களாக உருவாகுங்கள்  அல்லது உருவாக்குங்கள் அதன் முலம் " நம்மவர்களை நம்மவர்கள் அல்லது நமக்காக உள்ளவர்கள் ஆட்சி அதிகாரத்தை செய்திட ஒன்றுபடுங்கள் "

ஒட்டு போடலாம் வாங்க

இன்னும் எத்தனை நாளைக்கு இதை புறக்கனிகனும் அதை புறக்கனிகனும் சொல்லிக்கிட்டு இறுக்க போறோம் ! இப்படியே சொல்லி சொல்லி தான் நம்மலேயே புறகனுச்சுட்டனுங்க, இப்போ கையில இருக்கிறது  இந்த ஒட்டு மட்டும்தான் அதையும் புறக்கனிக்கனுமா ... சபாஷ் ,நம்ம மட்டும் தானே உணர்ச்சி உள்ள சமுதயமுனு சொல்லிக்கிட்டு திரியுறோம், ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டுன்னு சொல்லுவாங்க...

அதிரை தொகுதி பட்டுகோட்டை தொகுதியாக மாற்றப்பட்டது, நம் சமுதாயத்திற்கு எதிராக சூழ்ச்சி செய்யப்பட்டது என்று எல்லாம் கட்டுரை எழுதி கொண்டு இருக்கிறோம், அனால் அந்த சூழ்ச்சி செய்யப்பட்ட தருணத்தில் நாம், நம்மவர்கள் , நம் தலைவர்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள் என்று ஒரு வினாடியாவது சிந்திதது உண்ட ??? .. உண்மையை சொல்ல போனால் நாம் ரகத்தாக துங்கிகொண்டு இருந்தோம், இந்த  சூழ்ச்சி நடந்திருக்கிறது என்று தெரிவதற்கே நமக்கு பல வருடங்கள் தேவை படுகிறது 

 பட்டுகோட்டை தொகுதியில் இதுவரை உயர் சாதி இந்துக்களை தவிர ஒரு முஸ்லிம் வெற்றி பெற்றது உண்ட என்று கட்டுரை எழுதிகிறோம், எந்த கட்சியும் ஒரு முஸ்லிமை வேட்பாளராக அறிவித்தது உண்ட என்று குமுறுகிறோம் அனால் அதற்க்கு தகுதியான ஒருவரை நாம் வளர்த்தது உண்ட??? திமுக வின் கோட்டை என்று புகழப்படும் அதிரையில் திமுகவின் செயலாளர்  யார் ஒரு முஸ்லிமா?  அல்லது அதிமுகவின் செயலாளர்  முஸ்லிமா ? இப்போ சொல்லுங்கைய எப்படியா ஒரு முஸ்லிமா வேட்பாளராக அறிவிப்பாங்க ............

முதலமைச்சர் கலைஞர் எங்க உட்டுள சாப்புட்டு இருக்காறு எங்க மாமா உட்டுள சாப்புட்டு இருக்காறு சொல்லிட்டு அன்னைக்கு நம் மூத்தவர்கள் அரசியலை புரகனிததால்   இன்றைக்கு குப்பனும் , சுப்பனும் கட்சிக்கு தலைவராக மாறிவிட்டார்கள் , அவர்களுக்கு பிறந்த நாமும் இதைதான் செய்ய போகிறோமா ???

வெற்றி பெரும் அளவுக்கு நமக்கு வாக்களர்கள் சக்தி இல்லை என்றாலும் , வெற்றியை நிர்ணயம் செய்யும் வாக்காளர் சக்தி நம்மிடம்  உள்ளது , தலித்துடன் ஒன்றுகுடி மிக பெரிய அரசியல் சக்தியாக உருவாக வேண்டும் 

அன்புச் சகோதரர்களே 
இனியாவது விழித்து கொள்ளவேண்டும்!
அரசியல் விழிப்புணர்வு அடைய வேண்டும்!!
அரசை நமதாக்க வேண்டும் !!!
இல்லையெனில் நமது சமுதாயத்தை காவிகளுக்கு காவு கொடுக்கும் சூழ்நிலையை யாராலும் தடுக்க இயலாம் போகும் 

பி. கு 
அடிகடி கரண்டு போகுது வாங்கையா போராட்டம் நடத்துவோம் என்றால் வரமாட்டிங்க அட்லீஸ்ட் வாக்கை பதிவு செய்வதற்காவது  வாங்கையா